பிறப்பு, இறப்பு சட்டப்படி 2000ஆம் ஆண்டுக்கு முன்பு பிறந்தவர்களின் பெயர்களை வரும் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார்.
பெயர் பதிவு செய்வதற்கான கால அவகாசம் 19 ஆண்டுகள் வரை நீட்டிக்கப்பட்ட நிலையில் இறுதிக்கெடு விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
2023ஆம் ஆண்டு அக்டோபர் ஒன்றாம் தேதிக்கு பிறகு பிறந்த குழந்தைகளின் பெயர், பிறப்பு சான்றிதழ்களில் இல்லை என்றால் ஒரு வருடத்திற்குள் அதனை பதிவு செய்ய வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.