2002 ஆம் ஆண்டு வங்கியில் 50 லட்சம் ரூபாய் மோசடி செய்து விட்டு பல்வேறு பெயர்களில் வேறுவேறு ஊர்களில் தனது அடையாளத்தை மறைத்து தலைமறைவாக இருந்தவரை 22 ஆண்டுகளுக்குப் பிறகு நெல்லையில் சி.பி.ஐ கைது செய்தது.
எஸ்.பி.ஐ வங்கியின் ஹைதராபாத் கிளையில் கணினி ஆபரேட்டராக பணி செய்து வந்த சலபதிராவ் போலியான சம்பள பில் தயாரித்து மோசடியில் ஈடுபட்டதாக 2002-ம் ஆண்டு முதல் தேடப்பட்டு வந்தார்.
பெயரை மாற்றிக் கொண்டு சேலத்தில் ஒரு பெண்ணையும் திருமணம் செய்த சலபதிராவ் சிபிஐ தேடுதல் வேட்டைக்கு பயந்து போபால், உத்ரகாண்ட் என பல பகுதிகளுக்கும் சென்று தங்கியுள்ளார். எனினும் விடாமல் பின்தொடர்ந்த சி.பி.ஐ அதிகாரிகள், சலபதி ராவ் நெல்லை மாவட்டம் நரசிங்கநல்லூரில் நண்பர் ஒருவர் வீட்டில் இருப்பதை கண்டறிந்து கைது செய்தனர்.