குன்னூர் நகர்மன்றத் தலைவருக்கான தேர்தலில் தி.மு.கவைச் சேர்ந்த எம்.சுசிலா போட்டியின்றி தேர்வானார். நகராட்சித் தலைவராக இருந்த ஷீலா கேத்ரின் உயிரிழந்த நிலையில் புதிய தலைவரை தேர்ந்தெடுக்க இத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.
குன்னூர் நகர்மன்றத் தலைவராக எம்.சுசிலா போட்டியின்றி தேர்வு
திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை பேரூராட்சி தலைவருக்கான தேர்தலில் தி.மு.கவைச் சேர்ந்த மகாதேவன் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். மொத்தமுள்ள 14 பேரில் 5 அ.தி.மு.க கவுன்சிலர்கள் மற்றும் பா.ஜ.க கவுன்சிலர் ஒருவரும் இந்த மறைமுகத் தேர்தலை புறக்கணித்தனர்.