​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
குட்டி பசங்களா ஸ்கூல் போகல ? ஒழுங்கா ஊருக்குள் பஸ் விட்டா ஏம்மா கலெக்டர் ஆபீஸ் வர்ரோம்..! தாட் பூட் தஞ்சாவூர்.. பஸ் வருமா எங்க ஊர்..?

Published : Aug 05, 2024 9:09 PM



குட்டி பசங்களா ஸ்கூல் போகல ? ஒழுங்கா ஊருக்குள் பஸ் விட்டா ஏம்மா கலெக்டர் ஆபீஸ் வர்ரோம்..! தாட் பூட் தஞ்சாவூர்.. பஸ் வருமா எங்க ஊர்..?

Aug 05, 2024 9:09 PM

தஞ்சாவூர் மாவட்டம் வடுகன் புதுப்பட்டியில் இருந்து பள்ளிக்கூடம் செல்ல பேருந்து வசதி கேட்டு தங்கள் பெற்றோருடன் மனு அளிக்க வந்த பள்ளி மாணவ மாணவிகளிடம், பள்ளிக்கு செல்லாமல் மனு அளிக்க வந்தது ஏன் ? என்று மாவட்ட ஆட்சியர் கடிந்து கொண்டார்

தஞ்சை மாவட்டம் வடுகன் புதுப்பட்டி கிராமத்தில் வசித்து வரும் 50-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் மனையேறிப்பட்டி அரசு பள்ளியில படித்து வருகின்றனர். தங்கள் கிராமத்தில் இருந்து பள்ளி இருக்கும் மனையேறிப்பட்டிக்கு பல ஆண்டுகளாக பேருந்து வசதி இல்லாமல் இருப்பதாக கூறி மாணவ, மாணவிகள் தங்கள் பெற்றோருடன் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.

பள்ளி சீருடைகள் காலணி அணியாமல் வந்த மாணவ மாணவியரை பார்த்ததும் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் கோபமடைந்து, எந்த ஊரு கண்ணா ஏன் ஸ்கூலை விட்டுட்டு இங்கு வந்து இருக்கீங்க யார் உங்களை கூட்டிட்டு வந்தது என கேட்டார். குழந்தைகள் படிப்பை கெடுத்துட்டு கூட்டிட்டு வருவீங்களா ? என பெற்றோரிடம் கடிந்து கொண்டார்

பஸ் வரலைன்னா மனு கொண்டு வந்து கொடுக்கலாம், பேப்பர் டிவியில் வரணும் அப்படிங்கறதுக்காக பிள்ளைகளை அழைத்து வந்தது தவறு என்ர கலெக்டர், குட்டி பசங்களா இவங்க கூப்பிடுறாங்க அப்படின்னு ஸ்கூல் கட் பண்ணிட்டு வரக்கூடாது உங்கள் வேலை படிக்கிறது மட்டும்தான் என்று அறிவுரை கூறி அனுப்பி வைத்தார்