​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நீலகிரி கோக்கால் பகுதியில் 7 மீட்டர் அளவிற்கு பூமியில் புதையும் வீடுகள்... இந்திய புவியியல் ஆராய்ச்சியாளர்கள் குழு நாளை ஆய்வு

Published : Aug 05, 2024 7:31 PM

நீலகிரி கோக்கால் பகுதியில் 7 மீட்டர் அளவிற்கு பூமியில் புதையும் வீடுகள்... இந்திய புவியியல் ஆராய்ச்சியாளர்கள் குழு நாளை ஆய்வு

Aug 05, 2024 7:31 PM

நீலகிரி மாவட்டம் மேல் கூடலூர் அருகே உள்ள கோக்கால் பகுதியில் பூமியில் ஏற்பட்டு வரும் விரிசல் காரணமாக 8 வீடுகள் இடிந்து பூமிக்குள் புதைந்து வரும் நிலையில் இப்பகுதியில், இந்திய புவியியல் ஆராய்ச்சியாளர்களை கொண்ட ஐவர் குழு நாளை ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.

7 மீட்டர் அளவிற்கு வீடுகள் பூமியில் புதைந்துள்ளதாக கூறப்படும் நிலையில், அங்கு வசித்தவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் ஏற்கனவே அறிவுறுத்தியிருந்தது.