​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நான்கு மாவட்டங்களில் கோலாகலமாக நடைபெற்ற வள்ளி கும்மி ஆட்டம்....

Published : Aug 05, 2024 6:25 AM

நான்கு மாவட்டங்களில் கோலாகலமாக நடைபெற்ற வள்ளி கும்மி ஆட்டம்....

Aug 05, 2024 6:25 AM

கோவை கொங்கு பண்பாட்டு கலாச்சார அறக்கட்டளை சிங்கை வள்ளி கும்மியின்8ஆம் ஆண்டு விழா பீளமேட்டில் நடைபெற்றது. வள்ளி கும்மி, கிருஷ்ண பகவானின் கோலாட்டம், கருப்பராய சாமிக்கு உரிய பெருஞ்சலங்கை ஆட்டம் என 5 கலைகளை சிங்கை வள்ளி கும்மி குழுவினர், தொடர்ந்து 5 மணி நேரம் ஆடினர்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே தென்பொன்முடி கிராமத்தில், வள்ளி கும்மி கலையை புதிதாக கற்ற கிராமத்தினரின் அரங்கேற்றம் நடைபெற்றது. மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆண்களும் பெண்களும் முருகன் பாடலுக்கும் கிராமிய பாடலுக்கும் ஏற்றவாறு நடனம் ஆடினர்.

 

திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் ஆடி அமாவாசையை முன்னிட்டு பாடல் பெற்ற தலமான ஸ்ரீ கருணாம்பிகை அம்மன் உடனமர் அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் வளாகத்தில், பவளக்கொடி கும்மியாட்ட கலை குழுவின்141-வது அரங்கேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது.

 

சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதியில் ஒருவாப்பட்டி அருகே வள்ளி கும்மி ஆட்டம் அரங்கேற்றம் நடைபெற்றது. பம்பை மேளம் முழங்க நடைபெற்ற வள்ளி கும்மி ஆட்டத்தில் சிறுமிகள் முதல் பெண்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.