ஆடி அமாவாசையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் தங்களது முன்னொர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர்.
கன்னியாகுமரி கடற்கரையில் அமர்ந்து இருந்த புரோகிதர்கள் மற்றும் வேதமந்திரம் ஓதுவார்களிடம் தங்களது முன்னோர்களை நினைத்து பொதுமக்கள் பலி கர்ம பூஜை செய்தனர்.
ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி, ராமநாதசுவாமி கோவிலில் பல மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் குவிந்த பொதுமக்கள் எள், மற்றும் தர்ப்பபுள் வைத்து பிண்டம் வளர்த்து தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு காவிரி கரை புஷ்ப மண்டப படித்துறையில் மூன்று தலைமுறையினர் நினைவாக பிண்டம் பிடித்து பூஜை செய்து எள் தண்ணீரை ஆற்றில் விட்டு பொதுமக்கள் தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் பவானியில் ஆற்றில் இறங்கி குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் செய்து பிண்டங்களை மட்டும் பொதுமக்கள் ஆற்றில் விட்டு சென்றனர்.