​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சிகரெட் வாங்குவதற்கான வயது வரம்பை உயர்த்தியது இந்தோனேஷியா

Published : Jul 31, 2024 9:37 PM

சிகரெட் வாங்குவதற்கான வயது வரம்பை உயர்த்தியது இந்தோனேஷியா

Jul 31, 2024 9:37 PM

இந்தோனேஷியாவில், பள்ளி மாணவர்களிடையே புகை பிடிக்கும் பழக்கத்தை குறைக்கும் நடவடிக்கையாக, சிகரெட் வாங்குவதற்கான வயது வரம்பு 18-ல் இருந்து 21-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இந்தோனேஷியாவில் 7 கோடி பேருக்கு சிகரெட் புகைக்கும் பழக்கம் உள்ளதாகவும், அவர்களில் 7 சதவீதம் பேர் 10 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சிகரெட் மீதான கலால் வரியை ஒவ்வொரு ஆண்டும் உயர்த்திவரும் இந்தோனேஷிய அரசு, இந்தாண்டு 10 சதவீதம் உயர்த்தி உள்ளது.