ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றும் சிறப்பு தாசில்தார் மதிவாணன் 4 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றதாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.
சோளிங்கரைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவருக்குச் சொந்தமான ஆயிரத்து 913 சதுர மீட்டர் நிலம், ரயில்வே திட்டத்துக்காக கையகப்படுத்தப்பட்டு, இழப்பீட்டுத் தொகையாக 6 லட்சத்து 27 ஆயிரம் ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது.
நிலம் தொடர்பாக கோவிந்தராஜ் வழங்கியுள்ள உயில் ஆவணங்களைத் திரும்பப் பெற, மதிவாணன்4 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படும் நிலையில், கோவிந்தராஜ் லஞ்ச ஒழிப்புத்துறைக்குத் தகவல் தெரிவித்துள்ளார். அதன்படி பணத்தை வாங்கும்போது மதிவாணனை கையும் களவுமாக போலீசார் கைது செய்தனர்.