சங்ககிரி அருகே அரசு பேருந்தின் மீது கிரேன் லாரி மோதியதில் 2 பெண்கள் உள்பட 4 பேர் படுகாயமடைந்தனர்.
சாலையின் செண்டர் மீடியனில் இருந்த இடைவெளி வழியாக கண்டெய்னர் லாரி ஒன்று திரும்பியபோது, எதிர் திசையில் இருந்து வந்த கிரேன் லாரியின் ஓட்டுநர், கண்டெய்னர் லாரி மீது மோதமல் இருக்க தனது கிரேன் லாரியை வலதுபுறமாக வேகமாகத் திருப்பியதாக கூறப்படுகிறது. அப்போது அரசு பேருந்தின் பின் பகுதியில் கிரேன் லாரி பலமாக மோதியதில் பயணிகள் 4 பேர் காயமடைந்தனர்.