வங்கிக் கணக்கில் மினிமம் பேலன்ஸ் வைக்காத வாடிக்கையாளர்களிடம் இருந்து 2019-ஆம் ஆண்டு முதல் 2024-ஆம் ஆண்டு வரை, கடந்த ஐந்து ஆண்டுகளில் பொதுத்துறை வங்கிகள் சுமார் 8 ஆயிரத்து 500 கோடி ரூபாய் அபராதம் வசூலித்துள்ளன.
நாடாளுமன்ற மக்களவையில் கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி இத் தகவலைத் தெரிவித்தார். அதிகபட்சமாக பஞ்சாப் நேஷனல் வங்கி ஆயிரத்து 538 கோடி ரூபாயும், குறைந்தபட்சமாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி 20 கோடி ரூபாயும் வசூலித்துள்ளன.
2020-ஆம் ஆண்டு முதல் அபராதம் விதிப்பதை நிறுத்தி எஸ்.பி.ஐ வங்கி, 640 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.