ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே புஷ்பவனம் கிராமத்தை சேர்ந்த 72 வயதுள்ள முதியவர் மைக்கேல், கோவை சென்றுவிட்டு சொந்த ஊருக்கு திரும்பியபோது, மதுரை மாட்டுத் தாவணி பேருந்து நிலையத்தில், அறிமுகமான மொட்டை நபர், தேநீரில் மயக்க மருந்து கலந்து கொடுத்து திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
தானும் முதுகுளத்தூரை சேர்ந்தவன்தான் என்று மைக்கேலிடம் இயல்பாக பழகி பேருந்தில் இடமும்பிடித்து கொடுத்து அவர் அருகிலேயே அமர்ந்த மொட்டை நபர், மைக்கேலுக்கு தேநீர் வாங்கி வந்து அதில் மயக்க மருந்து கலந்து கட்டாயப்படுத்தி குடிக்க வைத்ததாக கூறப்படுகிறது.
மயக்க மருந்து கலந்த தேநீரை குடித்த மைக்கேல் மயக்கம் அடைந்ததை அடுத்து அவர் அணிந்திருந்த கைக்கடிகாரம், ஒன்னேகால் பவுன் தங்க மோதிரம் உள்ளிட்ட பொருள்களை, மொட்டை நபர் திருடிச் சென்றது தெரியவந்தது.
பேருந்நில் வாந்தி எடுத்து மயங்கிக் கிடந்த மைக்கேலுக்கு, சக பயணியாக பேருந்தில் பயணித்த ராமநாதபுரம் அரசு மருத்துவமனை செவிலியர் விசாலாட்சி மீட்டு சிகிச்சை அளித்தார்.