கடந்த இரண்டு வாரங்களாக கொங்கன் பகுதி முதல் கேரளாவின் மலப்புரம் வரை நீடித்த தொடர் மழையால், மலைப்பகுதிகளில் மண்ணின் உறுதித்தன்மை தளர்ந்ததே வயநாடு நிலச்சரிவுக்கு காரணம் என பருவநிலை ஆய்வு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
காசர்கோடு, கண்ணூர், கோழிக்கோடு, மலப்புரம், வயநாடு மாவட்டங்களில் அதிக மழையால் மண் இளகி நிலச்சரிவு ஏற்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
2019ஆம் ஆண்டில் கேரளாவில் பெருவெள்ளத்தை ஏற்படுத்தியதுபோன்றே, அரபிக் கடலில் கடந்த 2 நாட்களுக்கு முன் உருவான மேகக் கூட்டம் நிலப்பகுதிக்கு நகர்ந்து திங்கள் மாலை முதல் 50 சென்டி மீட்டருக்கு மேல் மழையை மேகவெடிப்பாக மலைப்பகுதியில் பொழிந்ததே நிலச்சரிவை ஏற்படுத்தி நூற்றுக்கு மேற்பட்ட உயிர்கள் புதையுண்டு உயிரிழக்க காரணமானதாகவும் பருவநிலை ஆய்வு நிபுணர்கள் கூறினர்.