நாட்டில் எந்த மாநிலமும் பின்தங்குவதை தாம் விரும்பவில்லை என்றும் முதலீடுகளை ஈர்ப்பதில் மாநிலங்களுக்கு இடையே ஆரோக்கியமான போட்டி நிலவ வேண்டும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற பட்ஜெட் தொடர்பான மாநாட்டில் உரையாற்றிய அவர், 2004ஆம் ஆண்டில் காங்கிரஸ் ஆட்சியில் 90,000 கோடி ரூபாயாக மூலதனச்செலவு இருந்த நிலையில், தற்போது 11 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக கூறினார்.
காங்கிரஸ் ஆட்சியின் 10 ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது, ரயில்வே, நெடுஞ்சாலைகளுக்கான நிதி ஒதுக்கீடு 8 மடங்கும், விவசாயத்துக்கான நிதி ஒதுக்கீடு 4 மடங்கும், பாதுகாப்புக்கான நிதி ஒதுக்கீடு 2 மடங்கும் உயர்த்தப்பட்டிருப்பதாக பிரதமர் குறிப்பிட்டார்.