சேலம் மாவட்டம் மேட்டூரில் தொட்டில்பட்டி பாலம் பகுதியில் செல்லும் காடையாம்பட்டி கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வீணாக வெளியேறி சாலையில் தேங்கியது.
இதனால் தாரமங்கலம், தொப்பூர், மேச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் குடிநிர் வினியோகம் பாதிக்கப்பட்டது. அடிக்கடி உடைப்பு ஏற்படுவதால் பழுதான குழாயை மாற்றி புதிய குழாய் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.