தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கூடலூரில் நேற்று இரவு பெய்த கன மழை காரணமாக இறுவயல் பகுதியில் நான்காவது முறையாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது.
மச்சிக்கொலி பகுதியில் கொட்டும் மழையில் ஊருக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை ஒன்று பாக்கு மரத்தை உடைத்தபோது உயர் மின்னழுத்த கம்பியில் மரம் உரசியதில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தது.
முதுமலை புலிகள் காப்பக பகுதியில் உள்ள மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தரைப்பாலம் மூழ்கியதால் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.