திருப்பூர் அடுத்த திருமுருகன்பூண்டியில் அரசுப் பேருந்தின் பின்னால் மற்றொரு அரசுப் பேருந்தும் அதன் பின்னால் தனியார் ஆம்னி பேருந்தும் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாயின.
முதலில் சென்ற அரசுப் பேருந்தின் ஓட்டுநர் சாலையோர குடிநீர் குழாயில் தண்ணீர் பிடிப்பதற்காக பேருந்தை திடீரென நிறுத்தியதால் விபத்து ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படாத நிலையில், விசாரணை நடைபெற்று வருகிறது.