​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
முருகன் கோவிலில் ஆடிக் கிருத்திகை தெப்பத் திருவிழா... பக்தர்கள் காவடி எடுத்து அலகு குத்தி நேர்த்திகடன்

Published : Jul 30, 2024 7:50 AM

முருகன் கோவிலில் ஆடிக் கிருத்திகை தெப்பத் திருவிழா... பக்தர்கள் காவடி எடுத்து அலகு குத்தி நேர்த்திகடன்

Jul 30, 2024 7:50 AM

திருத்தணி முருகன் கோவிலில் ஆடிகிருத்திகை முதல் நாள் தெப்பத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
கொட்டும் மழையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

ஆரணி அருகே ஆடி கிருத்திகையை முன்னிட்டு ரெட்டிப்பாளையம் சுப்பிரமணியர் கோவிலில்
பக்தர்கள் காவடி எடுத்து அலகு குத்தி நேர்த்திகடன் செலுத்தினர்.

வேலூர் மாவட்டம், காட்பாடி வள்ளிமலை வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு, பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த பக்தர்கள் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

புதுச்சேரி லாஸ்பேட்டை சிவசுப்பிரமணிய ஸ்வாமி தேவஸ்தானத்தில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு அலங்கரிப்பட்ட தங்க தேரில் முருகப் பெருமான்உட்புறபாடு நடைபெற்றது.