முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் திரைப்படங்கள் திரையரங்குகளின் வெளியாகி 8 வாரங்களுக்கு பிறகே ஓடிடி தளங்களில் வெளியிட வேண்டும் என தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்களின் சம்பளம் மற்றும் இதர செலவுகள் கட்டுக்கடங்காமல் உயர்ந்து கொண்டிருப்பதால் அதை முறைப்படுத்த நவம்பர் ஒன்றாம் தேதி முதல் தமிழ் சினிமாவின் படப்பிடிப்பு வேலைகளை நிறுத்தி வைக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.