அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் குறித்த விவாதத்தின்மீது மக்களவையில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, 20 ஆண்டுகளில் இல்லாத வகையில், பட்ஜெட்டில் கல்விக்கு நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார்.
பிரதமர் மோடி, அமித் ஷா, மோகன் பக்வத், அஜித் தோவல், அம்பானி, அதானி ஆகிய 6 பேரது சக்கரவியூகத்தில் நாடு சிக்கியுள்ளதாக பேசிய ராகுல் அம்பானி, அதானி ஆகியோர்களுக்காவே பட்ஜெட் தயாரிக்கப்பட்டதாகக் கூற முற்பட்டார்.
அப்போது இடைமாறித்த சபாநாயகர் ஓம் பிர்லா அம்பானி, அதானி பெயர்களை குறிப்பிடக் கூடாது எனக்கூறியதால் ஏ1, ஏ2, என்று குறிப்பிட்டு ராகுல் மாற்றிக் கூறினார். இந்த நிலையில், ராகுல்காந்தி நாடாளுமன்ற மாண்பை குலைக்கும் வகையில் பேசுவதாக அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றம்சாட்டினார்.