பாரிஸ் ஒலிம்பிக் துப்பாக்கி சுடும் போட்டியில் வெண்கலம் வென்ற மனு பாக்கரின் பயிற்சிக்காக மத்திய அரசு 2 கோடி ரூபாய் செலவிட்டதாகவும், பயிற்சிக்காக ஜெர்மனி, சுவிட்சர்லாந்துக்கு அவரை அனுப்பியிருந்ததாகவும் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் மன்சுக் மண்டாவியா தெரிவித்தார்.
மற்ற வீரர், வீராங்கனைகளும் ஒலிம்பிக்கில் சிறப்பாக தங்களது திறமையை வெளிப்படுத்துவார்கள் என நம்புவதாக கூறிய அவர், கேலோ இந்தியா திட்டத்தில் விளையாட்டு மேம்பாட்டு கட்டமைப்புகளை பிரதமர் அதிகரித்ததாகவும் திறமைசாலிகளை அடையாளம் கண்டு, செலவுகளை ஏற்று சிறந்த பயிற்சியாளர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.