தைவானைத் தொடர்ந்து சீனாவை தாக்கிய கேமி சூறாவளி... வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்
Published : Jul 29, 2024 7:40 AM
தைவானைத் தொடர்ந்து சீனாவை தாக்கிய கேமி சூறாவளி... வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்
Jul 29, 2024 7:40 AM
தைவான் மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளைத் தொடர்ந்து சீனாவை தாக்கிய கேமி சூறாவளியால், மத்திய சீன மாகணமான ஹுனானில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதுவரை இல்லாத அளவுக்கு, 24 மணி நேரத்தில் 670 மில்லிமீட்டர் மழை பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
டோங்ஜாங் நீர்தேக்கத்தில் இருந்து வினாடிக்கு சுமார் 88 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. பத்துக்கும் மேற்பட்ட நகரங்களில் மின்சாரமும், தொலைத்தொடர்பு சேவைகளும் துண்டிக்கப்பட்டதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.