பாரீஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ள இந்திய வீரர், வீராங்கனைகளை நாட்டு மக்கள் அனைவரும் ஆதரவளித்து, ஊக்கமளிக்குமாறு பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.
உலக அரங்கில் மூவர்ணக் கொடியை பெருமையுடன் ஏந்த நம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசியபோது தெரிவித்தார்.
சில நாட்களுக்கு முன்பு, கணித உலகில் ஒலிம்பிக் போட்டிகளும் நடத்தப்பட்டதாக தெரிவித்த மோடி, அதில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த இளைஞர்கள் பங்கேற்றதில் முதல் ஐந்து இடங்களில் இந்தியர்கள் இடம்பிடித்ததாகவும் மோடி குறிப்பிட்டார்.
யுனெஸ்கோ உலக பாரம்பரிய பட்டியலில் 43வதாக அசாமின் சாரெய்டியோ மைடம்ஸ் எனப்படும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடுகாடு சேர்க்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.