உதகை சுற்றுவட்டாரத்தில் பலத்த காற்றுடன்கூடிய சாரல் மழை
Published : Jul 28, 2024 3:28 PM
நீலகிரி மாவட்டம் உதகை சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய சாரல் மழை பெய்து வரும் நிலையில், ஆங்காங்கே மண் சரிவு ஏற்பட்டு, மரங்களும், மின்கம்பங்களும் விழுந்தன.
புதுமந்து,கால்ப்லிங்ஸ்,தொட்டபெட்டா,பெர்ன் ஹில்,லவ்டேல் உள்ளிட்ட பகுதிகளில் பத்திற்கும் மேற்ப்பட்ட மரங்கள் விழுந்தன. மின்கம்பங்கள் விழுந்ததால் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா ஸ்தலமான தொட்டபெட்டா மலை சிகரத்திற்கு செல்லும் சாலையில் மரங்கள் விழுந்து மண்சரிவு ஏற்பட்டு உள்ளதால் பாதுகாப்பு கருதி இன்று ஒருநாள் மட்டும் சுற்றுலா பயணிகள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.
மேலும் குன்னூர் - உதகை மலை ரயில் பாதையிலும் ஆங்காங்கே மரங்கள் விழுந்ததால், ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.