ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 18வது நபராக கைதான காவல் உதவி ஆய்வாளர் திருநாவுக்கரசின் மகன் பிரதீப் சம்பவம் நடந்த அன்று அப்பகுதியில் இருந்து கொண்டு, ஆம்ஸ்ட்ராங்கை சுற்றி ஆட்கள் பெரியளவில் இல்லை என்பதை கொலையாளிகளுக்கு தகவல் கொடுத்ததாக போலீசார் தெரிவித்துள்ளார்.
ஆம்ஸ்ட்ராங் கொலையை அரங்கேற்றுவதற்கென அனைவருக்கும் தனித்தனியாக செல்போன் வாங்கி கொடுக்கப்பட்டு தகவல் பரிமாறிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. சம்பவம் நடந்த பகுதிக்கு வந்த பிரதீப், கொலையாளிகளுக்கு ரூட் போட்டுக் கொடுத்துவிட்டு அங்கிருந்து தப்பியதாகவும் போலீசார் தெரிவித்தனர்.