நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்ததால் 90 அடி கொள்ளளவு உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் 88 அடியை நெருங்கியுள்ளது.
அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 3,421 கன அடியாக உள்ள நிலையில், 3,715 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணையில் இருந்து திறக்கப்படும் உபரி நீர் அதிகரித்துள்ளதால் அமராவதி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது