தீனதயாள் உபாத்தியாயா கல்வித்திட்டத்தின் கீழ் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இன மாணவர்களுக்கு இலவசமாக தொழிற்கல்வி பயிற்சி அளிக்கும் திட்டத்திற்காக சேலம் பெரியார் பல்கலைக்கழகத்திற்கு மத்திய அரசு 2 கோடியே 62 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கியிருந்தது.
இதில், தங்களுக்கு வெறும் 2 மாதங்கள் மட்டுமே பயிற்சி அளிக்கப்பட்டதாக மாணவர்கள் புகார் அளித்ததனர். இது குறித்து விசாரித்து அறிக்கை அளிக்க, தேசிய தாழ்த்தப்பட்டோருக்கான ஆணையம் உத்தரவிட்டதை அடுத்து, 11 மாணவர்களிடம் சேலம் போலீசார் விசாரணை நடத்தினர்