பாரிஸ் மாநகரில் ஒலிம்பிக் போட்டிகள் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டத்தில் 300 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
ஒலிம்பிக் போட்டிகளால் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டதாகவும், சாலையோரங்களில் வசிப்பவர்கள் அப்புறப்படுத்தப்பட்டதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர்.
காஸா போரை கண்டித்து, இஸ்ரேல் வீரர்களை ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க அனுமதி அளிக்கக்கூடாது என பாலஸ்தீன ஆதரவாளர்கள் முழக்கம் எழுப்பினர். அப்போது, இஸ்ரேலுக்கு ஆதரவாக சிலர் திரண்டு வந்து எதிர் கோஷம் எழுப்பினர்.