திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அனுப்பட்டி பகுதியில் வண்டல் மண் எடுக்க அனுமதி பெற்று விட்டு கிராவல் மண் எடுக்கப்படுவதாக கிராம மக்கள் குற்றம்சாட்டினர். 285 நீர்நிலைகளில் களிமண் மற்றும் வண்டல்மண் இலவசமாக எடுத்துக்கொள்ள திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் அனுமதி வழங்கியிருந்தார்.
சிலர் கிராவல் மண் எடுத்து ஒரு லோடு 8,000 ரூபாய் வரை விற்பதாக தாசில்தார் ஜீவாவிடம் மக்கள் புகார் தெரிவித்தனர். அதிகாரிகளிடம் பேசி கொண்டிருந்த போது திடீரென தங்கள் மீது தாக்குதல் நடத்த முயற்சி நடந்ததாக பொதுமக்கள் கூறினர்.