​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கு ரூ.6,000 சம்பளம் நிர்ணயித்தது எப்படி?: நீதிபதிகள்

Published : Jul 25, 2024 6:55 PM

ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கு ரூ.6,000 சம்பளம் நிர்ணயித்தது எப்படி?: நீதிபதிகள்

Jul 25, 2024 6:55 PM

பள்ளிக்கல்வித்துறையில் ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கு எவ்வாறு 6,000 ரூபாய் ஊதியம் நிர்ணயிக்கப்பட்டது? என தமிழக அரசிடம் கேள்வி எழுப்பிய  உயர்நீதிமன்ற மதுரை அமர்வு, விலைவாசி உயர்ந்துள்ள சூழலில் மக்கள் குறித்து யோசிக்க மாட்டீர்களா? என வினவியுள்ளது.

ஆசிரியர் அல்லாத ஊழியர்களுக்கு ஊதியத்தை நிர்ணயிப்பதில் விதிமுறைகள் பின்பற்றப்பட வில்லை எனக்கூறி தொடுக்கப்பட்ட வழக்கின் விசாரணையின் போது, 6,000 ரூபாயில் எப்படி குடும்பத்தை நடத்த முடியும்? என கேட்ட நீதிபதிகள், இதுபோன்ற விவகாரங்களில் கவனமுடன் செயல்படவும் அறிவுறுத்தினர்.