கும்பகோணத்தில் செயல்படும் தனியார் பள்ளி ஒன்றில், AI தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்ட வித்யா சரஸ்வதி என்று பெயர் சூட்டப்பட்ட ரோபோ ஆசிரியையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஆறு லட்சம் ரூபாய் செலவில் 50 கிலோ எடையுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த ரோபோ, ஒன்றாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பாடங்களில் உள்ள சந்தேகங்களை தீர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செயல் விளக்கத்தின்போது ஆங்கிலத்தில் கேட்ட கேள்விகளுக்கு வித்யா சரஸ்வதி உரிய பதில் அளித்தது.