சென்னையில் நடைபெற்ற ஸ்ரீ சிவக்குமார் கல்வி அறக்கட்டளையின் 45-வது ஆண்டு விழாவில் பேசிய நடிகர் சிவக்குமார், அக்காலத்தில் தாம் 365 ரூபாய் 50 பைசாவில் பத்தாம் வகுப்பு வரை படித்து முடித்ததாகவும் இன்று கார்த்தியின் மகளை எல்.கே.ஜியில் சேர்ப்பதற்கு இரண்டரை லட்ச ரூபாய் கட்டணம் கேட்கிறார்கள் என்றும் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா, கார்த்தி ஆகியோரும் பங்கேற்று, பன்னிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று, முதல் தலைமுறையாக கல்லூரி செல்லும் விளிம்புநிலை குடும்பங்களை சேர்ந்த மாணவர்களுக்கு ஊக்கத் தொகைகளை வழங்கினர்.