தென் அமெரிக்க நாடான பராகுவேயில் இருந்து ஐரோப்பிய நாடான பெல்ஜியமிற்கு கப்பலில் கடத்தப்பட இருந்த நான்காயிரம் கிலோ கொக்கைன் போதைப்பொருளை அதிகாரிகள் கைப்பற்றினர்.
எளிதில் கண்டுபிடிக்க முடியாதபடி, வெள்ளை சர்க்கரை மூட்டைகளில் மறைத்து கடத்தப்பட இருந்த கொக்கைனின் சந்தை மதிப்பு ஆயிரத்து 700 கோடி ரூபாய் என அதிகாரிகள் தெரிவித்தனர்.