பழனியில் மாணவியை கடித்ததால் அடித்து விரட்டப்பட்ட நாய் ஒன்று, அதே பகுதியில் இளைஞர் ஒருவரையும் கடித்தது , எட்டி உதைத்ததால் அவரது காலில் அணிந்திருந்த ஷூவை கவ்விச்சென்ற சம்பவத்தின் பரபரப்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது
பழனி -தாராபுரம் சாலையில் தீயணைப்புநிலையம் எதிரே திங்கட்கிழமை காலை பாலிடெக்னிக்கல்லூரி மாணவி சாலைஓரத்தில் நடந்து வந்து கொண்டிருந்த போது தெருநாய் ஒன்று மாணவியின் காலை கவ்விப்பிடித்து கடித்தது. தடுக்க முயன்ற மாணவியின் கையிலும் கடித்து குதறியது.
மாணவி கூச்சலிட்டதையடுத்து பொதுமக்கள் அந்த நாயை அடித்து விரட்டிமாணவியை மீட்டனர். அரசுமருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள மாணவி சிகிச்சைபெற்று வருகின்றார்.
இந்நிலையில் செவ்வாய்கிழமை காலை அதேஇடத்தில் சாலைஓரத்தில் நடந்து சென்ற இளைஞரை கவ்விப்பிடித்து தெருநாய் ஒன்று கடித்தது
காலால் எட்டி உதைத்து நாயை விரட்ட முயன்ற போது அவரது காலில் அணிந்திருந்த ஷூவை கவ்விக்கொண்டு அந்த நாய் அங்கிருந்து ஓடியது
இந்த இரு சம்பவங்களின் சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில் நகராட்சி ஊழியர்கள் நாய்களை கூண்டு வலை வைத்து பிடித்து வருகின்றனர்.