நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையம் அருகே ஆவணப்படம் எடுக்க முயன்ற ரஷ்ய நாட்டினர் 6 பேரிடம் சுமார் 6 மணி நேரம் விசாரணை நடத்திய போலீஸார் அவர்களது செல்ஃபோன் மற்றும் கேமராக்களில் பதிவாகியிருந்த காட்சிகளை அழித்தனர்.
அணுமின் நிலையத்தை சுற்றியுள்ள சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்திற்குள் புகைப்படமோ அல்லது வீடியோவோ எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் ரஷ்ய குழுவினர் அப்பகுதியில் வீடியோ எடுத்ததாக கடலோர பாதுகாப்பு படையினரால் பிடிக்கப்பட்டு கூடங்குளம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
விசாரணையில், அவர்கள் அணு உலை குறித்து ஆவணப்படம் எடுக்க உரிய அனுமதி பெற்றிருந்தாலும் வெளியே படம் எடுக்க அனுமதியில்லை என போலீஸார் தெரிவித்தனர்.