சென்னையில் 63,246 கோடி ரூபாயில் நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப்பணிக்கு மத்திய அரசால் ஒப்புக்கொள்ளப்பட்ட 50 சதவீத பங்கு தொகையான 31,623 கோடி ரூபாயை விரைந்து ஒதுக்கீடு செய்ய வேண்டுமென மாநிலங்களவையில் தி.மு.க உறுப்பினர் வில்சன் வலியுறுத்தினார்.
கோவை, மதுரை, திருச்சிக்கான மெட்ரோ திட்டங்களுக்கு ஒப்புதல் கொடுப்பதோடு, பல்வேறு பணிகளுக்காக தமிழக அரசிற்கு மத்திய அரசு வழங்காமல் நிலுவையில் வைத்துள்ள தொகைகளையும் விரைந்து வழங்க வேண்டுமென அவர் தெரிவித்தார்.
மாநிலங்களுக்கான நிதி பகிர்வில் மத்திய அரசு நியாயமாக இருக்க வேண்டும் எனவும் இந்த விவகாரத்தில் பிரதமர் தலையிட வேண்டும் எனவும் வில்சன் தெரிவித்தார்.