​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
புதிய சிற்றுந்துத் திட்டம்.. கருத்து கேட்பு கூட்டத்தில் மினிபஸ் உரிமையாளர்கள் - ஆட்டோ தொழிற்சங்கத்தினர் இடையே வாக்குவாதம்

Published : Jul 22, 2024 7:37 PM

புதிய சிற்றுந்துத் திட்டம்.. கருத்து கேட்பு கூட்டத்தில் மினிபஸ் உரிமையாளர்கள் - ஆட்டோ தொழிற்சங்கத்தினர் இடையே வாக்குவாதம்

Jul 22, 2024 7:37 PM

சென்னையில் நடைபெற்ற புதிய சிற்றுந்து திட்டம் குறித்த கருத்து கேட்புக் கூட்டத்தில் மினிபஸ் உரிமையாளர்கள் - ஆட்டோ டாக்சி ஆதரவு தொழிற்சங்கத்தினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

பேருந்து செல்லும் சாலையில் 8 கி.மீ , பேருந்து சேவையற்ற வழித்தடங்களில் 17 கி.மீ என மொத்தம் 25 கி.மீ தூரத்திற்கு சிற்றுந்துகளை இயக்க அனுமதிப்பது தொடர்பான கருத்து கேட்பு கூட்டம் கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.

சிற்றுந்துகளின் பயண தூரத்தை அதிகரிப்பது அரசுப் பேருந்துகளின் வருவாயைப் பாதிக்கும் என அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கருத்து தெரிவித்தனர். தனியார் மினி பஸ்கள் 25 கி.மீ வரை இயங்க அனுமதித்தால் அவை அரசுப் பேருந்துகளை அழித்துவிடும் என சிஐடியு உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தன.

சிற்றுந்து சேவை விரிவுபடுத்தப்பட்டல் ஆட்டோ, உள்ளிட்ட வாடகை வாகன ஓட்டுநர்கள் பாதிக்கப்படுவார்கள் என ஆட்டோ தொழிலாளர் சங்கத்தினர் கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து மினிபஸ் உரிமையாளர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

சொத்துகளை இழந்து, நகைகளை அடகு வைத்து மினி பேருந்துகளை இயக்கி வருவதாகவும் மினிபஸ் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.