சென்னை கிண்டியில் ஆதரவற்ற நிலையில் இருந்த நபருக்கு உரிய சிகிச்சை அளித்து பணி வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
காலையில் தாம் நடைபயிற்சி மேற்கொண்டிருந்த போது, அந்த நபர் தம்மை பார்த்து வணக்கம் சொன்னதாகவும், விசாரித்த போது திருச்சியை சேர்ந்த ராஜா என்பதும் பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகளை சேகரித்து விற்றுக் கொண்டு சாலையோரம் வசித்து வருவது தெரியவந்தாக அமைச்சர் கூறியுள்ளார்.
அவரை தமது இல்லத்திற்கு அழைத்து சென்று குளிக்க வைத்ததுடன், உடை மற்றும் உணவு வழங்கி மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனையும் செய்யப்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அந்த நபரின் வாழ்வாதாரத்திற்கு தற்காலிக பணி ஒன்றும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சமூகவலைதளத்தில் அமைச்சர் தெரிவித்துள்ளார்.