​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
உலகப் பண்பாட்டுச் சின்னங்களைப் பாதுகாக்க 1 மில்லியன் டாலர்... இந்தியாவின் சார்பில் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி

Published : Jul 22, 2024 7:28 AM

உலகப் பண்பாட்டுச் சின்னங்களைப் பாதுகாக்க 1 மில்லியன் டாலர்... இந்தியாவின் சார்பில் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி

Jul 22, 2024 7:28 AM

உலகின் பல்வேறு பண்பாட்டுச் சின்னங்களைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் யுனெஸ்கோ உலகப் பண்பாட்டு மையத்திற்கு இந்தியாவின் சார்பில் 10 லட்சம் அமெரிக்க டாலர்கள் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

டெல்லியில் 46வது உலகப் பாரம்பரியக் குழுவின் கூட்டத்தைத் தொடங்கி வைத்து பிரதமர் உரை நிகழ்த்தினார்.

உலகின் பண்பாட்டுச் சின்னங்களைப் பாதுகாப்பது முக்கியப் பொறுப்பு என்று இந்தியா கருதுவதாக மோடி தெரிவித்தார். 

கேதார்நாத் கோவிலை அடைவதற்கான பாதை கரடுமுரடானது. ஹெலிகாப்டர்கள் மூலமாக தான் செல்ல வேண்டி உள்ளது. ஆனால் அப்போது இந்தக் கோவிலை எப்படிக்கட்டி முடித்தார்கள் என்று மோடி வியந்தார்.