திருப்பதி ஏழுமலையான் கோயில் தரிசன டிக்கெட் மோசடிகளை தடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள பிரத்யேக செயலி இன்னும் சில வாரங்களில் நடைமுறைக்கு வரும் என அக்கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஒரே மெயில் ஐடி, மொபைல் எண்ணை பயன்படுத்தி ஆதார் எண்களை மாற்றி ஒருவரே சுமார் 1,500 முதல் 2,000 பதிவுகளை செய்து குலுக்கல் முறையில் வழங்கிய சேவை டிக்கெட்டுகளை 60 முறை பெற்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக செய்தியாளர்களிடம் தேவஸ்தான செயல் அதிகாரி ஷியாமலா ராவ் தெரிவித்தார்.
புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டால், ஆதார் எண்ணில் மாற்றம் செய்து டிக்கெட்டுகளை பெறுவது முற்றிலும் தடுக்கப்படும் என்று கூறிய அவர், பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவின் சுவை குறைய, தரம் குறைந்த நெய்யும், மூலப்பொருட்களுமே காரணம் என்பது ஆய்வில் தெரியவந்ததை அடுத்து, அவற்றை சப்ளை செய்த ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்கபட்டுவருவதாகக் கூறினார்.