வெளிநாடுகளிலிருந்து சிறுக சிறுக 267 கிலோ தங்கம் கடத்தப்பட்ட விவகாரத்தில், கடத்தல்காரர்களுக்கு சென்னை விமான நிலையத்தில் கடை ஒதுக்கீடு செய்துக் கொடுத்ததாக பா.ஜ.க பிரமுகர் பிரித்திவியிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
தங்கக் கடத்தலில் ஈடுபட்டு வந்த யூடியூபர் சபீர் அலிக்கு, விமான நிலையத்தில் பி.ஆர்.ஜி நிறுவன இயக்குனரான பிரித்வி 77 லட்சம் ரூபாயை பெற்றுக் கொண்டு கடை ஒதுக்கிக் கொடுத்ததாகவும், அதன் மூலமாக அவர்கள் தங்கக் கடத்தலை எளிதாக மேற்கொண்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, பிரித்வியிடம் வாக்குமூலத்தை பதிவு செய்த சுங்கத்துறை அதிகாரிகள், ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியாவின் இணை பொது மேலாளர் செல்வநாயகம் உள்ளிட்ட 5 பேருக்கு சம்மன் அனுப்பி உள்ளனர்.