கோவையின் காட்டூர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏறக்குறைய 10 ஆண்டுகளாக தனிமையில் வீட்டுக்குள் வயதான தாயும், அவரது திருமணமாகாத மகளும் அடைந்து கிடப்பது தெரிய வந்துள்ளது.
ருக்மணி என்பவரின் கணவர் இறந்த பிறகு, அவரும் அவரது மகள் திவ்யாவும் உணவுப் பொருட்களை வாங்க எப்போதாவது வெளியே செல்வது தவிர வீட்டுக்குள்ளேயே முடங்கி வசித்த நிலையில், வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதையடுத்து வீடு முழுவதும் பல ஆண்டுகளாக குப்பைகள் குவிந்திருப்பது தெரிய வந்தது.
வீட்டை சுத்தம் செய்ய யாரையும் அனுமதிக்க மறுக்கும் அவர்கள், ஆண் துணையை இழந்த அச்சத்தில் வீட்டுக்குள்ளேயே இருக்கத் தொடங்கி, நாளடைவில் வெளியுலகைப் பாராமல் மனரீதியாகவே பாதிக்கப்பட்டதாக தெரிகிறது. கடும் சுகாதார சீர்கேட்டில் வசிக்கும் பெண்கள் குறித்த வீடியோ வெளியானதும் மாநகராட்சி சார்பில் குப்பை அகற்றும் பணி தொடங்கியது.