கன்னியாகுமரி மாவட்டம், மருதங்கோடு அருகே முன்னால் சென்ற காரை இடித்து தள்ளிவிட்டு ரயில்வே சிக்னல் கம்பத்தில் மோதிய மினி கன்டெய்னர் லாரி அதே காரின் மீது கவிழ்ந்த விபத்து சிசிடிவி கேமராவில்பதிவாகியுள்ளது.
குடும்பத்துடன் காரில் வந்து கொண்டிருந்த குலசேகரத்தை சேர்ந்த கிருஷ்ணகுமார் என்பவர் கக்கோட்டுவிளை பகுதியில் உள்ள சிக்னலில் ரயில் தண்டவாளத்தை மெதுவாக கடந்தபோது விபத்து ஏற்பட்டுள்ளது.
கன்டெய்னர் லாரியின் பிரேக் செயலிழந்ததால் ஏற்பட்ட விபத்தில் காரின் முன்பகுதி முற்றிலும் சேதமடைந்த நிலையில், அதில் இருந்த 3 பேரும், கன்டெய்னர் லாரியின் ஓட்டுநர் மற்றும் உதவியாளர்கள் 2 பேரும் உயிர்தப்பினர்.