​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இந்திய நாட்டுக்குள் ஒரு கிராம் போதைப்பொருள்கூட நுழைய அனுமதிக்க மாட்டோம்: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா

Published : Jul 19, 2024 7:58 AM

இந்திய நாட்டுக்குள் ஒரு கிராம் போதைப்பொருள்கூட நுழைய அனுமதிக்க மாட்டோம்: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா

Jul 19, 2024 7:58 AM

இந்திய நாட்டுக்குள் ஒரு கிராம் போதைப்பொருள்கூட நுழைய அனுமதிக்க மாட்டோம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.

போதைப்பொருள் ஒழிப்பு குறித்து டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அவர், போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர்கள், ஹவாலா பரிவர்த்தனை மற்றும் வரி ஏய்ப்புகளில் ஈடுபடுவதாகவும், இதுபோன்ற தேசவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கு கடும் தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்று கூறினார்.

போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க மத்திய அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு நடவடிக்கைகளுக்கு நல்ல பலன் கிடைத்து வருவதாக அமித் ஷா தெரிவித்தார். கடந்த பத்து ஆண்டுகளில் 22 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ள சுமார் 5 லட்சத்து 43 ஆயிரம் கிலோ போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.