பெங்களூருவில் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ளதால், ஓசூரில் டெங்கு பரவல் தடுப்பு வழிமுறைகள் குறித்து செய்முறை விளக்கத்துடன் மாநகராட்சி அதிகாரிகள் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
ஓசூர் சிப்காட்டில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள், காலி டிரம்களில் தண்ணீர் தேங்கி இருந்த ஒரு தொழிற்சாலைக்கு நோட்டீஸ் அனுப்பி, பிளீச்சிங் பவுடர் கலந்த தண்ணீரால் சுத்தம் செய்யுமாறு அறிவுறுத்தினர்.