மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே கோனேரிராஜபுரம் உமா மகேஸ்வரர் கோவில் குளத்தில் ஜேசிபி இயந்திரம் மூலம் தூர்வாரும் பணியின் போது 3 அடி உயரத்தில் 360 கிலோ எடை கொண்ட தலை கை கால் இல்லாத உடல்மட்டும் கொண்ட ஐம்பொன் சிலை மீட்கப்பட்டுள்ளது.
தொல்பொருள் துறையின்ஆய்வுக்குப் பிறகே இது ஐம்பொன்சிலையா என்பது உறுதி செய்யப்படும் என்று அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.