​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பிரபல ரவுடி சேது என்கின்ற சேதுபதி துப்பாக்கி முனையில் கைது தனியிடத்தில் வைத்து போலீஸ் விசாரணை

Published : Jul 17, 2024 7:00 PM

பிரபல ரவுடி சேது என்கின்ற சேதுபதி துப்பாக்கி முனையில் கைது தனியிடத்தில் வைத்து போலீஸ் விசாரணை

Jul 17, 2024 7:00 PM

சென்னையை அடுத்த சோழவரத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி சேது என்கின்ற சேதுபதியை துப்பாக்கி முனையில் கைது செய்துள்ளதாக ரவுடிகள் ஒழிப்பு பிரிவு தனிப்படை போலீசார் தெரிவித்தனர்.

ஆட்டுத்தாங்கல் என்ற இடத்தில் கைது செய்யப்பட்ட ரவுடியை, ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருவதாகவும், சில தினங்களுக்கு முன் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட ரவுடி முத்து சரவணனின் எதிரியாக வலம் வந்த சேதுபதி மீது பல்வேறு கொலை முயற்சி மற்றும் கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் போலீசார் கூறினர்.