ஆடி மாத முதல் நாளை முன்னிட்டு தமிழ்நாட்டின் பல்வேறு கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் ஆரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள பவானி அம்மன் கோயிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
பக்தர்கள் சிலர் வேப்பிலை ஆடை அணிந்து பாதயாத்திரையாக நடந்து வந்து வேண்டுதல் நிறைவேற்றினர். புற்றுக் கோயிலில் பாலை ஊற்றி, நெய் தீபம் ஏற்றி வழிபட்டனர்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் குருநாதசுவாமி கோயில் ஆடி பெருந்தேர்த்திருவிழா பூச்சாட்டுதலுடன் இன்று தொடங்கியது.
புதுப்பாளையம் அருகே உள்ள வனத்தில் குருநாத சாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்து பக்தர்கள் வழிபட்டனர்.