​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வேலூரில் பாதாள சாக்கடை திட்டப்பணிக்காக தோண்டிய பள்ளத்தில் எதிர்பாராத விதமாக விழுந்த டூவீலர்

Published : Jul 17, 2024 10:30 AM

வேலூரில் பாதாள சாக்கடை திட்டப்பணிக்காக தோண்டிய பள்ளத்தில் எதிர்பாராத விதமாக விழுந்த டூவீலர்

Jul 17, 2024 10:30 AM

வேலூர் மாவட்டம் மாங்காய் மண்டி பகுதியில் வந்த இருசக்கர வாகனம் எதிர்பாராத விதமாக பாதாள சாக்கடை திட்டப் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்ததில் வாகன ஓட்டி காயமடைந்தார். 

பாதாள சாக்கடை அமைக்கும் பணி மெத்தனமாக நடப்பதாகவும், இதனால் அப்பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுவதாகவும் கூறப்படும் நிலையில் பள்ளத்தை சுற்றி தடுப்புகள் எதுவும் வைக்கப்படாத நிலையில் விபத்து ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து உடனடியாக ஆய்வு செய்து பள்ளத்தை மூடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி மேயர் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.