சட்டவிரோதமாக குழந்தை விற்பனை செய்த புகாரில் கைது செய்யப்பட்டுள்ள திருச்செங்கோடு அரசு மருத்துவர் அனுராதா ஜாமீனில் வெளி வந்ததைத் தொடர்ந்து அவர் தொடர்பான இடங்களில் மீண்டும் சோதனை நடைபெற்றது.
திருச்செங்கோடு அரசு மருத்துவமனை மற்றும் அனுராதாவுக்கு சொந்தமான சிகாமணி கிளினிக் ஆகிய இடங்களில் ஏற்கனவே வைக்கப்பட்டிருந்த சீலை அகற்றி மருத்துவத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.